தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி!!!

தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, இன்று மட்டும் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், கலிபோர்னியாவில் இருந்து தமிழகம் வந்த 64 வயது பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் துபாயில் இருந்து நெல்லை திரும்பிய 43 வயது ஆண் ஒருவருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் நெல்லை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

What do you think?

விருதுநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிப்பு!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் – எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு