திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர்…!

திண்டுக்கல்லில் 340 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து இன்று அடிக்கல் நாட்டினர்.

திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு நிலம் ஒதுக்கப்பட்டது.

இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, சரோஜா, செங்கோட்டையன், குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மு. விஜயலட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து வேளாண் சேமிப்பு கிடங்கு, தடுப்பணை, காவலர் குடியிருப்பு, பள்ளி கட்டிடம் சீரமைப்பு, கால்நடை மருந்தகம், வேளாண் கூட்டுறவு சங்கம் நவீனப்படுத்துதல், மனநல காப்பக கட்டிடம் என ரூ.14.02 கோடி மதிப்பிலான 45 கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

மேலும் மருத்துவத்துறை, வனத்துறை, சமூகப் பாதுகாப்பு திட்டம், வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் முதியோர் உதவித்தொகை, முத்ரா கடன் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் பயன்பெற்ற 25 ஆயிரத்து 213 பயனாளிகளுக்கு ரூ.63.54 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் அவர் வழங்கினார்.

What do you think?

-1 points
Upvote Downvote

ஆர்யா, கெளதம் மேனன் வெளியிட்ட கமலி From நடுக்காவேரி டீசர்….!

டெல்லியில் ஆலங்கட்டி மழை….!