திருச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

திருச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மதிமுக சார்பில் மாணவ மாணவிகளிடம் கையெழுத்து பெறப்பட்டது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோழமை கட்சிகளுடன் இணைந்து பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார். அதன்படி திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி அருகே மதிமுக மாவட்ட செயலாளர் வெல்ல மண்டி சோமு, மாநில மகளிர் அணி அமைப்பாளர் ரொகையா ஆகியோர் கையெழுத்து பெற்றனர். இதில் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் கலந்து கொண்டன.

What do you think?

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் உயிரிழப்பு, சீனாவில் 636 பேர் பலி!

கிரிக்கெட்டில் மட்டுமல்ல பானிபூரி செய்வதிலும் தோனி தல தான்!