திருமணமான ஒரே நாளில் காதல் ஜோடி தற்கொலை!

ஆம்பூர் அருகே திருமணமான ஒரே நாளில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ரயில் தண்டவாளத்தில், இரு சடலங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் சாம்பரிஷிகுப்பத்தை சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் ராமதாஸ், திருப்பத்தூரை சேர்ந்த நந்தினி (எ) சுமித்ரா ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் நேற்று (மார்ச்-19) மிட்டாளத்தில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இதனை தங்களது பெற்றோருக்கு செல்போன் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதல் ஜோடி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

What do you think?

தளபதி 65 திரைப்படம் விஜய் நடிப்பில் வெளியான இந்த படத்தின் 2ம் பாகமா?

கொரோனாவுக்காக தன் சொகுசு ஹோட்டலை இலவச மருத்துவமனையாக மாற்றும் ரொனால்டோ!