நிர்பயா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு !

நிர்பயா வழக்கில் மரண தண்டனை கைதிகளை தூக்கில் ஏற்ற விசாரணை நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்குமாறு, செய்த மனு மீது, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

நிர்பயா வழக்கின் குற்றவளிகளான பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷ்ய் குமார் சிங், முகேஷ் சிங் ஆகியோரின் தூக்கு தண்டனை கடந்த 1ம் தேதி நிறைவேற்றிருக்க வேண்டும். இந்நிலையில் அவர்களது சட்ட ரீதியான நிவாரண வழிகள் இன்னும் முடியவில்லை என அவர்களது தரப்பு வழக்கறிஞர் வாதாடியதையடுத்து கடந்த 31ஆம் தேதி விசாரனை நிதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து மத்திய அரசும், திகார் நிர்வாகம் மற்றும் நிர்பயாவின் பெற்றோரும் தடையை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

What do you think?

வைகோவின் கோரிக்கை மாநிலங்களவையில் ஏற்பு!

காமெடி சூப்பர் ஸ்டார் யோகிபாபு ரகசிய திருமணம்