February 27, 2020
Madhimugam
விளையாட்டு

பழிவாங்கும் படலமா? – இந்தியாவை மெகா சேஸ் செய்த நியூசி!

ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா  – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 347 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 103 ரன்களும், அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் 88 ரன்களும் எடுத்தனர்.

கடினமான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியினரும், இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஹென்றி நிக்கோஸ் 78 ரன்களும், டாம் லாதம் 69 ரன்களும் விளாசி அவுட்டாகினர். கடைசி வரை ஆட்டமிழக்கமல் அதிரடியாக விளையாடிய ராஸ் டெய்லர் 84 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியை கைப்பற்றி நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

Related posts

இந்தியாவை பழிதீர்த்த நியூசி, 2 – 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்!

Digital Team

இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து

Digital Team

பகலிரவு டெஸ்ட் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்குலி!

Digital Team

உலகக் கோப்பை கிரிக்கெட் தூதராக சிவகார்த்திகேயன் நியமனம்

Digital Team

நியூசி டெஸ்ட் இந்திய அணி போராட்டம்

Digital Team

நியூசியுடன் முதல் டெஸ்ட்; தடுமாறிய இந்தியா – காப்பாற்றி விடுமா மழை?

Digital Team
You cannot copy content of this page
Madhimugam