பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக பட்ஜெட்..!

தமிழக சட்டப்பேரவையில் வரும் 14 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை வரும் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குவதாக கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும், இதனை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் நாட்கள் ஆகியவை முடிவு செய்யப்பட உள்ளது.

What do you think?

டெல்லியில் ஆட்சி அமைக்கபோவது யார்..?

ஏப்ரல் 14 ஆம் தேதி கட்சி பெயரை அறிவிக்கும் ரஜினி..!