45 Total Views , 1 Views Today
பெகாஸஸ் விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என்று
நிபுணர் குழு தனது அறிக்கையை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஒ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ்
உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் கடந்த ஆண்டு
அக்டோபர் மாதம் எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள்
மற்றும் பத்திரிகையாளர்களைக் கண்காணித்து வருவதாக
குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில்
பொதுநல மனு தாக்கல் செய்த நிலையில், ஒய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன்
தலைமையில் தொழில்நுட்ப நிபுணர் குழு ஒன்று அமைத்து
விசாரனை நடத்தியது
விசாரனை குழு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில்
இன்று ஆக்.25 தலைமை நீதிபதி என்வி ரமணா அமர்வு முன்பு வழக்கு
விசாரணைக்கு வந்தது.
அறிக்கை குறித்து தலைமை நீதிபதி கூறுகையில் ஆய்வு செய்து
சமர்ப்பிக்கப்பட்ட 29 செல்போன்களில் ஐந்து செல்போன்களில்
மால்வேர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆனால் அது பெகாஸஸ்
மென்பொருள்தான் என உறுதியாகவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் நிபுணர் குழு அறிக்கையில் விசாரணையின்போது மத்திய
அரசு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என்பதை சூட்டிக்காட்டியுள்ளார்.
இணைய பாதுகாப்பை மேம்படுத்த சட்டதிருத்தம் கொண்டு வரவும்,
கண்காணிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கபட்டவர்கல் புகார் அளிக்க
தகுந்த வழிமுறைகளை உருவாக்கவும் பரிந்துரைத்துள்ளார்.