மயிலுக்கு பதில் கிளி – சர்ச்சையில் சிக்கிய யோகிபாபு!

காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள காக்டெயில் படத்தில் இந்து மதத்தை அவமதித்ததாக அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

தமிழ் சினிமாவில் தற்போதைய காமெடி நடிகர்களில் செம ட்ரெண்டிங்கில் இருப்பவர் யோகிபாபு. ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவர், இப்போது ரஜினி, விஜய் என உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் தவறாமல் இடம் பிடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினியுடன் ’தர்பார்’, விஜய்யுடன் பிகில், சந்தானம் உடன் ’டகால்டி’ ஆகிய படங்களில் யோகிபாபு இணைந்து நடித்திருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஜய் முருகன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள ’காக்டெய்ல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த போஸ்டரில் யோகிபாபு முருகன் வேடமணிந்து இருப்பது போன்றும், அவருக்கு அருகே முருகனின்  வாகனமான மயிலுக்கு பதில் கிளி உள்ளது. இதையடுத்து இந்த போஸ்டருக்கு தற்போது கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பலரும் இந்து மத கடவுளான முருகனை தவறாக சித்தரித்துள்ளதாகவும், இது இந்து மத உணர்வை புண்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் சினிமாவை விளம்பரப்படுத்துவதற்காக இதுபோன்று மலிவாக காட்சிகளை வைப்பதாகவும் தங்களது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளனர். 

What do you think?

தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில் புதிய வழக்கு!