மாணவர்கள் எதிர்காலம் வீணாகபோய்விடும்! – ரஜினிகாந்த் அறிவுறுத்தல்

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அரசியல் லாபத்துக்காக சில கட்சிகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்திவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை ஆணையம் அனுப்பிய கடிதம் இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், சில அரசியல் கட்சிகள் தங்களின் லாபத்துக்காக இஸ்லாமியர்களிடையே பீதியை ஏற்படுத்திவிட்டதாக தெரிவித்தார். மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு அவசியம் என்றும், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்கள் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். இல்லையென்றால் அரசியல் கட்சிகளின் தவறான வழிநடத்தலுக்கு பலியாகி, எதிர்காலம் வீணாகபோய்விடும் என்றும் மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். சட்டத்தை மீறி வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் தொழிலை தான் செய்யவில்லை என ரஜினி விளக்கமளித்தார்.

What do you think?

நகைச்சுவை நடிகர் கே.கே.பி.பாலகிருஷ்ணன் காலமானார்

பொதுத்தோ்வு கட்டணம் மாணவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும்! – செங்கோட்டையன்