மிரட்டலாக வந்துள்ள கவினின் ‘லிப்ட்’ ஃபர்ஸ்ட் லுக்…..!

கவின் நடிப்பில் உருவாகும் இரண்டாவது படம் லிப்ட். சரவணன் மீனாட்சி எனும் தொடரில் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாசலியாவுடனான காதல் சர்ச்சையில் சிக்கி பின் மீண்டு திரைக்கு வந்திருப்பவர் கவின் .

பிக்பாஸ் வருவதற்கு முன்னதாகவே சினிமாவில் ஒப்பந்தமாகியிருந்தார் கவின். நட்புன்னா என்னனு தெரியுமா என்கிற படம் தான் கவினின் முதல் படம்.

விளம்பர படங்களை இயக்கி வந்த வினித், இயக்குநராக கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ள படம் லிப்ட். கவின் மற்றும் அம்ரிதா அய்யர் நடிப்பில், ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி மிரட்டி வருகிறது.

கவின் மற்றும் அம்ரிதா அய்யர், லிப்டுக்குள் அமர்ந்திருக்க, அந்த இடம் முழுவதும் ரத்தம் தெறித்து காணப்படுகிறது.

What do you think?

யெஸ் வங்கியில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய ஐசிஐசிஐ வங்கி முடிவு….!

‘கொரோனா அச்சம்’ அமெரிக்க விசா நிறுத்தி வைப்பு!