மெரினாவில் உள்ள கடைகளின் வாடகை குறித்து அறிக்கை தாக்கல்

மெரினா கடற்கரையில் உள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை மெரினாவில் கடற்கரையை சுத்தமாக பராமரிக்கவும், அங்குள்ள கடைகளை ஒழுங்குபடுத்தி உரியக்கட்டணம் வசூலிக்குமாறும் சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சொற்பத் தொகையை வாடகையாக நிர்ணயித்து சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதனைப்பார்த்து அதிருப்தி அடைந்த நீதிபதிகள், வாடகையை அதிகரிக்குமாறு அறிவுறுத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வினீத்கோத்தாரி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், மெரினா கடற்கரையில் மோட்டார் பொருத்தப்பட்ட வண்டி கடைக்கு ஆண்டுக்கு 3 ஆயிரம் ரூபாயும், மோட்டார் பொருத்தாத வண்டி கடைக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 500 ரூபாயும் முன்பணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் மாத வாடகையாக ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்துள்ளதாக மாநகராட்சி தெரிவத்துள்ளது.

What do you think?

ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் தயார் பிரதமர் மோடி

நகைச்சுவை நடிகர் கே.கே.பி.பாலகிருஷ்ணன் காலமானார்