யெஸ் வங்கியில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய ஐசிஐசிஐ வங்கி முடிவு….!



நாட்டின் ஐந்தாவது பெரிய தனியார் துறை வங்கியான யெஸ் வங்கியின் நிதி நிலைமையில் கடுமையான சரிவைத் தொடர்ந்து, கடந்த வாரம் யெஸ் வங்கி திவால் என அறிவித்தது. மேலும் அந்த வங்கியை இந்திய ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

யெஸ் வங்கியின் 49 சதவீதப் பங்குகளை வாங்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விருப்பம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், யெஸ் வங்கியில் முதலீடு செய்ய மற்றொரு தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி முன்வந்துள்ளது.

இன்று மும்பை பங்குச் சந்தையில் இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், யெஸ் வங்கியில் ரூ.1,000 கோடியை முதலீடு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டுக்கு ஐசிஐசிஐ வங்கியின் உயர் மட்டக் குழு நேற்று (மார்ச் 12) நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. யெஸ் வங்கியின் 100 கோடிப் பங்குகளை பங்கு ஒன்று ரூ.10 என்ற விலைக்கு ஐசிஐசிஐ வாங்கப் போகிறது.



What do you think?

கொரோனா வைரஸ் குறித்து அமிதாப் பச்சன் வெளியிட்ட வீடியோ….!

மிரட்டலாக வந்துள்ள கவினின் ‘லிப்ட்’ ஃபர்ஸ்ட் லுக்…..!