ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் தயார் பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம்
தயாராகிவிட்டதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அயோத்தியில் மிகப்பெரிய ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் தயாராகவிட்டதாக தெரிவித்தார். மேலும், ராமர் கோயில் கட்டுவதற்கான ஸ்ரீராம் ஜன்மபூமி திரத் ஷேத்ரா’ என்ற பெயரில் அறங்காவலர் குழுவும் அமைக்கப்பட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ, சீக்கிய, புத்த உள்ளிட்ட எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைவரும் ஒரே குடும்பம் என சுட்டிக்காட்டிய மோடி, அனைவருக்குமான வளர்ச்சி என்பதே அரசின் நோக்கம் எனவும் அதிலிருந்து சிறிதும் விலகாமல் மத்திய அரசு பயணித்துக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

What do you think?

கோலாகலமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு

மெரினாவில் உள்ள கடைகளின் வாடகை குறித்து அறிக்கை தாக்கல்