February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending அரசியல் சினிமா

“ஆண்டவனே தவறு செய்தாலும் தவறுதான், விஜய் விவகாரத்தில் தலையிட மாட்டோம்” – செல்லூர் ராஜூ

ஆண்டவனே தவறு செய்தாலும் தவறுதான், நடிகர் விஜய் வீட்டில் நடக்கும் வருமானவரித் துறை சோதனை குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

ஏ.ஜி,எஸ் நிறுவனத்தில் சோதனை நடத்திய வருமானவரித் துறையினர், அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த பிகில் படத்தில் விஜய் நடித்திருந்ததால், அவரது சம்பளம் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், விஜய்யின் ரசிகர்கள் தரப்பில் இது ஆளும் அரசின் பழிவாங்கும் நோக்கம் என கூறிவருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ள பதிலில். “ஆண்டவனே தவறு செய்தாலும் தவறுதான். தவறு செய்வோர் மீதான நடவடிக்கையில் அதிமுக அரசு தலையிடாது. எங்கள் மீது குறை இருந்தாலும் உடனே சொல்லுங்கள், நாங்கள் திருத்திக்கொள்ள தயார் என” செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் – நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு

Digital Team

அமைச்சர் ஜெயக்குமார் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? – திமுக எம்.எல்.ஏ., அப்பாவு சவால்!

Digital Team

திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

Digital Team

டெல்லி போலீஸ் என்ன செய்து கொண்டு இருக்கிறது ? நடிகை குஷ்பு

superadmin

விபத்தில் சிக்கிய அஜித்; வைரலாகும் வீடியோ – #GetWellSoonThala

Digital Team

தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam