February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending அரசியல் தமிழ்நாடு

விஜய் வீட்டில் நடத்தப்படும் சோதனையில் அரசியல் இல்லை – மாஃபா பாண்டியராஜன்

நடிகர் விஜய் வீட்டில் நடைபெறும் வருமானவரித் துறை சோதனையை அரசியலுடன் இணைத்து பேசக்கூடாது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கிராமியத் திருவிழாவின் தொடக்கமும் செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது. இதில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகை சுகாசினி, இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர் பாண்டியராஜன் எம்ஜிஆர் பாடலைப் பாடியும், இசையமைப்பாளர் அனிருத் வாத்தியங்களை இசைத்தும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் ரேக்ளா வண்டியினை ஓட்டினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், “பொதுமக்களின் கருத்தை ஏற்று 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததன் மூலம், இது மக்களுக்கான அரசு என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து, அதன் வேரை அழிக்கும் வேலையை அமைச்சர் ஜெயக்குமார் செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும், விஜய் வீட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையை அரசியலுடன் இணைத்துப் பேசக்கூடாது என்றும், சிஏஏ குறித்தும் மாணவர்கள் போராட்டம் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்து சரிதான் என்றும் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

Related posts

துப்பாக்கிச் சூடு:ஆணையத்தில் ஆஜராக விளக்கு கேட்கும் ரஜினி

superadmin

பில்கேட்ஸின் அதிநவீன சொகுசு கப்பல் 4,500 கோடியா?

Digital Team

மோதலில் ஈடுபட்ட இந்திய, வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை

Digital Team

அச்சு அசலா ஜெ. போன்றே இருக்கும் கங்கனா…!

superadmin

காஷ்மீர் குறித்து அமெரிக்கா கவலைப்பட வேண்டாம் – ஜெய்சங்கர்

Digital Team

டிக்-டாக் வீடியோ எடுத்த மாணவன் கைது

Digital Team
You cannot copy content of this page
Madhimugam