வெளியானது விஷாலின் துப்பறிவாளன் -2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்….!

2017-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் துப்பறிவாளன். இப்படம் நல்ல விமர்சங்களை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் எடுக்கும் பணிகள் தீவிரமாகின.

இதன் 60 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் பட்ஜெட் அதிகமானதாக கூறி படத்திலிருந்து மிஷ்கின் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தானே படத்தை இயக்கவுள்ளேன் என விஷால் அறிவித்தார்.

இதில் விஷாலுடன் பிரசன்னா, கெளதமி, ரகுமான், அஷ்யா உள்ளிட்டோர் நடிக்க இளையராஜா படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமானார்.

இந்நிலையில் நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் கனியன் பூங்குன்றன் மற்றும் மனோ மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளனர். இந்த முறை “லண்டனில் வேட்டை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

What do you think?

‘ஈரானில் கொரோனாவால் ஒரே நாளில் 63 பேர் பலி’

ஆக்ராவில் வண்ணமயமாக ஹோலி கொண்டாடிய ஏவி 31 படக்குழுவினர் …!