வெளியிட்ட ட்ராக் லிஸ்டில் மாற்றம் செய்த ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம்….!

லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது இதனை சன் டிவி தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இன்று காலை இதன் ட்ராக் லிஸ்ட் வெளியிடப்பட்டது. அது இணையத்தில் வைரலானது.

அதில் ஒரு பாடலுக்கு “தறுதல கதறுனா”என பெயர் வைக்கப்பட்டிருந்தது. அது நடிகர் தல அஜித்தை தரக்குறைவாக விமர்சிக்கவே வைக்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் .

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அந்த ட்ராக் லிஸ்டை நீக்கிவிட்டு தற்போது புதிய ட்ராக் லிஸ்டை வெளியிட்டுள்ளனர். அதில் “தறுதல கதறுனா” என்பதற்கு பதில் “போனா போகட்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.

What do you think?

‘கொரோனா அச்சம்’ இனி AC வகுப்பு பயணிகளுக்கு கம்பளிகள் கிடையாது!

மாஸ்டர் இசைவெளியீட்டு விழா மேடையில் தாயின் ஆசையை நிறைவேற்றிய விஜய்