வேளாண்துறை கண்காட்சியில் 200 அரங்குகள்! – அமைச்சர் தகவல்

தலைவாசல் அருகே வேளாண்துறை சார்பில் நடைபெறும் கண்காட்சியில் 200 அரங்குகள் அமைக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தலைவாசல் அருகே ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள கால்நடை பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி, விலங்கின அறிவியலுக்கான உயர் ஆராய்ச்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 9 ந் தேதி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கால்நடைத்துறை அமைச்சர் இராதாகிருஷ்ணன் அந்த இடங்களை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர். அடிக்கல் நாட்டு விழாவின் போது, மாநிலங்கள் திரும்பி பார்க்கும் அளவிற்கு கால்நடை பூங்கா அமையும் எனவும் 2 நாட்கள் நடைபெறும் விவசாயத்துறை கண்காட்சியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனவும், அவர் தெரிவித்தார்.

What do you think?

பொதுத்தோ்வு கட்டணம் மாணவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும்! – செங்கோட்டையன்

இந்தியாவை இந்திய நாடுகளின் ஒன்றியம் என அழைக்க வேண்டும்! – மாநிலங்களவையில் வைகோ