உதயநிதியுடன் இயக்குநர் மாரிசெல்வராஜ் இணையும் புதிய படத்தின் பெயர் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்புகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் வைகை புயல் நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் இணைநடிகராக நடிக்க நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் தற்போது தமிழில் `விக்ரம்’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
இப்படத்திற்கான தலைப்புடன் கூடிய போஸ்டரை மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இந்தப் படத்துக்கு, `மாமண்ணன்’ என்று படக்குழு பெயரிட்டுள்ளது. அத்துடன், “எனது மூன்றாவது படைப்பு இது. நன்றியும் அன்பும் ஏ.ஆர்.ரஹ்மார் சார், உதயநிதி ஸ்டாலின் சார்” என்று குறிப்பிட்டு, சகநடிகர்களை டேக் செய்துள்ளார்.