சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான தனது அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக தடைகள் பெருகி வருகின்றன.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான தனது அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவுக்கு ராக்கெட் எஞ்சின் வழங்குவதையும் நிறுத்துவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அணு ஆயுத போர் என்பது தங்கள் கையில் இல்லை என்றும் அது முழுக்க முழுக்க நேட்டோ படைகள் மற்றும் மேற்கத்திய நாடுகள் கைகளில் தான் இருக்கிறது.எனவே அணு ஆயுத பயன்பாடு என்பது தங்கள் நிலைப்பாடு இல்லை என்று ரஷ்ய தரப்பு விளக்கியுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது உலக நாடுகள் பல பொருளாதார தடை விதித்து வந்த நிலையில், ரஷ்யாவும் உலக நாடுகளுக்கு பதிலடி தரும் விதமாக இந்த நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.