சாத்தன்குளம் கொலைவழக்கு- சாட்சிகளுக்கு கொலை மிரட்டல் ..!
மதுரை : மதுரை மாவட்டம் சாத்தான் குளத்தில் தந்தை மகனை, கொலை செய்த குற்றத்திற்காக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும் இந்த வழக்கு குறித்து 3மாதத்திற்குள் விசாரணையை முடித்து விட வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாத்தான் குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை போலீசார் கைது செய்து விசாரணைக்காக கோவில்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, கொடுமையாக தாக்கியுள்ளனர். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.
இதன் பெயரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கணேஷ், ஏட்டு முருகன், சாமத்துரை, என அனைவரும் கைது செய்யப்படுள்ளனர்.
இவர்கள் மீது சி.பி.ஐ கொலைவழக்கை பதிவு செய்து, மதுரை முதலாவது அமர்வு நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்றுது.
மேலும் இதுகுறித்து ஸ்ரீதர் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரணை செய்தது.
அதில் முக்கிய சாட்சிகளான ரேவதி, பியூலா என 47 பேரிடம் விசாரணை செய்து அவர்கள் அளித்த வாக்கு மூலத்தை ஏற்று கொண்டது.
மேலும் இன்னும் சில சாட்சிகளை விசாரிக்க வேண்டியிருப்பதால், சிறையில் இருப்பவர்கள் ஜாமீனில் விடுவீக்க படலாம், இதற்கு முன் விசாரித்த சாட்சிகளையே இவர்கள், கொலை மிரட்டல் விட்டு இருக்கின்றனர்.
இவர்களை வெளியே விட்டால், மற்ற சாட்சிகளையும் கலைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே இவர்களின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இதனை அறிந்த நீதிபதி இளங்கோவன், வழக்கை மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்து, 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.