தினமும் காலையில் சூரியபகவானை வணங்குவது ஏன் தெரியுமா..?
மன நிம்மதி என்பது நாம் அனைவருக்கும் தேவைப்படும் ஒன்று. வாழ்வில் எல்லாம் நாளும் நமக்கு நிறைவு தருமா என்றால்? சற்று சிந்திக்க வேண்டி தான் இருக்கிறது.
அப்படி மனதில் நிம்மதியும், உடல் ஆரோக்கியமும் பெற சில வழிமுறைகள்.
தினமும் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரியபகவனை வழிபாட்டால் எதிர் வினைகள் நீங்கி, நாம் நினைக்கும் செயலில் வெற்றி கிடைக்கும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.
கிழக்கு திசை நோக்கி சூரியபகவானை பார்த்து இருகைகள் தூக்கி வணங்கி “ஓம் சூர்யாய நமக” என்று சொல்லி 3முறை உச்சரிக்க வேண்டும்.
பின் ஒரு பானத்தில் தண்ணீர் வைத்து கொண்டு அதை மூன்று முறை தரையில் விட வேண்டும். அது சூரிய பகவானிற்கே தீர்த்தம் அளிப்பதற்கு சமமாகும்.
பின் வலது பக்கமாக திரும்பி பிரதட்சணம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், மனவளமும், உடல் நலமும் கூடும். மேலும் சூரிய பகவானை வேண்டிவிட்டு, பூஜை அறைக்கு வந்து குலதெய்வத்திடம் விளக்கு ஏற்றி வழிபட்டால். வீட்டில் செல்வம் செழிக்கும், வீட்டில் உள்ள எதிர் வினைகள் ஒழிந்து போகும் எனவும் சொல்லுவார்கள்.