மொழி பெயர்க்கப்பட்ட நூல்கள் வெளியீடு…!! 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…!!
சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், 75 நூல்கள் மற்றும் மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்புத் துறையில் புதுமை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா மற்றும் 2025 நிறைவு விழாவில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கான மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில் பங்குபெற்று 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 2024-ஆம் ஆண்டு 40 நாடுகள் பங்குபெற்று 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பின்னர் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தூதர் விருது, உலகளாவிய தொலைநோக்கு டிஜிட்டல் புத்தக கண்காட்சி சிறப்பு விருது, பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, நவீன தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, கூட்டு வெளியீட்டு கூட்டாண்மை விருது, பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருது, புத்தக ஊக்குவிப்பு விருது, உலகளாவிய இலக்கிய ஆதரவிற்கான விருது ஆகிய விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
இந்த விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஒன்றிய முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், மற்றும் பன்னாட்டு பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..