வெள்ளி சிம்மாசனத்தில் காட்சி அளித்த – காரமடை ராமானுஜர்
வைணவர்களின் முதன் முதலாக தோன்றியவர் ராமானுஜர். சித்திரை மாதம் ராமானுஜருக்கு உகுந்த நாளாகும், அதிலும் குறிப்பாக திருவாதிரை நட்சத்திர நாளில் வைணவ திருத்தலங்களில் சிறப்பு பூஜைகளும், அவரை போற்றும் வகையில் வைபவம் நடைபெறும்.
கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. வைணவ திருத்தலங்களில் மிகவும் புகழ் பெற்றது. அக்கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா இன்று காலை நடைபெற்றது.
அதிகாலையிலேயே மூலவரான அரங்க நாதருக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் தீப ஆராதனையும், விஸ்வக்சேனர் பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டது.
நவ கலசத்தில், ஆவாஹனம் நாமம் சொல்லப்பட்டு, உற்சவர் மட்டும் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து வெள்ளி சிம்ம வாகனத்தில், வெண்பட்டு குடையில் பரிவட்டம் சூட்டி, ரங்க மணடபத்தில் இருந்து. அரங்கநாதர் கோவிலுக்கு வந்தார்.
அவரை போற்றும் வகையில் நூற்று அந்தாதி பாடல்களை பாடி, வைபவ பூஜைகள் நடந்தன.
உச்சிகால பூஜை நடந்து முடிந்த பின்னரே, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த உச்சிகால பூஜையை காண ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.