விஜயிடம் இருந்து இந்த விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டும் – மைக் மோகன்..!
மோகன்:
கோலிவுட் ஹீரோவான மோகன் 80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்த நடிகர்களுள் இவரும் ஒருவர்.கன்னட, மலையாளம் , தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் மிகவும் அறியப்பட்டார்.
தமிழில் மட்டும் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.
கோட் திரைப்படம்:
விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து மோகன் விஜயை பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
மோகன் பேசியது:
சமிபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மோகன் விஜயை பற்றி சுவரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது இந்த படத்தில் விஜயுடன் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு நன்றி எனவும் விஜய் ரொம்பவே அமைதியான மனிதர், அமைதியாகவே இருப்பார்.
இந்த ஒரு விஷயத்தை அவரிடம் இருந்து மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என மோகன் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
-பவானிகார்த்திக்