‘கொரோனா வைரஸ் எதிரொலி’ சென்னையிலிருந்து புறப்படும் 10 விமானங்கள் ரத்து!

கொரோனா வைரஸ் பரவி வருவதால் சென்னையிலிருந்து புறப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தற்போது 90 நாடுகளில் பரவி பொதுமக்களிடையே மிகப்பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் வெளிநாடுகளிலிருந்து வந்த ஒருவர் மற்றும் சிறுவன் ஒருவனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் , கொரோனாவால் சென்னையில் இருந்து புறப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் ஆகிய நிறுவனங்கள் குவைத், ஹாங்காங் செல்லும் 10 விமானங்களை ரத்து செய்துள்ளன.

மேலும் குவைத், ஹாங்காங், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

What do you think?

தலைப்பு சிக்கலில் சூர்யாவின் புதிய படம்

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர்!