உசேன் போல்ட்டை வீழ்த்திய மேலும் ஒரு கம்பாலா வீரர்

கர்நாடகாவில் நடத்தப்படும் புகழ்பெற்ற கம்பாலா போட்டிகள், இந்தியாவின் சிறந்த 100 மீட்டர் தடகள சாதனையாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

உலகின் பிரபல தடகள வீரரான ஜமைக்காவின் உசேன் போல்ட்டின் 100 மீட்டர் உலக சாதனையை, ஸ்ரீனிவாஸ் கவுடா என்ற இளைஞர் 9.55 வினாடிகளில் கடந்து முறியடித்தார். அதுவும் காளைகளுக்கு இணையாக நீர் நிறைந்த சவாலான களத்தில் ஓடி ஆச்சரியப்படுத்தினார். இந்த செய்தி உலக அளவில் ட்ரெண்டானது.

இதையடுத்து, ஸ்ரீனிவாஸுக்கு உரிய ஓட்டப் பந்தய பயிற்சிகள் அளிக்கப்பட்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை தெரிவித்தது. ஆனால், தான் கம்பாலா போட்டியில் மட்டுமே பங்கேற்ப இருப்பதாகவும், தடகளப் போட்டிகளில் பங்கேற்க இயலாது என்றும் கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்..

இந்நிலையில், நிஷாந்த் ஷெட்டி என்ற இளைஞர், உசேன்போல்ட், ஸ்ரீனிவாஸ் கவுடா ஆகியோரது சாதனையை தற்போது முறியடித்துள்ளார். அதாவது 100 மீட்டர் தூரத்தை 9.52 வினாடிகளில் கடந்து 0.03 வினாடிகள் வித்தியாசத்தில் புதிய வரலாற்றை படைத்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று பெல்தாங்கடி தாலுகாவில் உள்ள வேனூரில் நடைபெற்ற சூர்யா- சந்திர ஜோடுகரே கம்பாலா போட்டியின் அரையிறுதி சுற்றில் பங்கேற்ற நிஷாந்த் ஷெட்டி இந்த சாதனையை புரிந்தார். இவர் 143 மீட்டர் தூரத்தை இரண்டு காளைகளுடன் ஓடி 13.61 வினாடிகளில் கடந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி ஐகாலா கிராமத்தில் நடந்த கம்பாலா போட்டியில் 145 மீட்டர் தூரத்தை 13.62 வினாடிகளில் கடந்து ஸ்ரீநிவாஸ் கவுடா 30 ஆண்டுகால சாதனையை முறியடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What do you think?

மனுஷ்யபுத்திரனின் விளக்கத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

வெளியானது ரஜினியின் மேன் vs வைல்ட் மோஷன் போஸ்டர் – #ThalaivaOnDiscovery