1,052 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் – நிர்மலா சீதாராமன்

The Minister of State for Commerce & Industry (Independent Charge), Smt. Nirmala Sitharaman addressing a press conference, in New Delhi on October 14, 2016.

நடப்பு நிதியாண்டில் வரி ஏய்ப்பு தொடர்பாக 1,052 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2019 – 20ம் நிதியாண்டில் 893 நிறுவனங்களில் நடத்திய சோதனையில், வரி ஏய்ப்பு தொடர்பாக 1,052 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

2018 -19ம் நிதியாண்டில் 983 நிறுவனங்களில் சோதனை நடத்தி 1,584 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வரி ஏய்ப்பு தொடர்பான புகார்கள் வரும்போது எல்லாம், சட்டத்துக்கு உட்பட்டு சோதனைகளும் பறிமுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். வருமான வரித்துறை விசாரணைக்கு உள்ளாகும் நபர்களின் தகவல்களை வெளியிட, வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 138 விலக்களிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

What do you think?

திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் இத்தனை ஆயிரம் கோடி இழப்பா?

‘இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்’ விஜய்யின் விக் குறித்து நடிகர் ஸ்ரீமன் மழுப்பலான பதில்!