பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் தேதி..! மறு கூட்டல்..?
தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான இந்த ஆண்டிற்கான 2023-2024 10 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதத் தகுதி பெற்றிருந்தனர்.
செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.
பொது தேர்வு முடிவுகள்:
இதனையடுத்து 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் எழுதிய தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுது.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்று நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய அரசுப் பள்ளி,
அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எனப் பலரும் முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருந்த நிலையில் இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியானது..
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளல், மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கை:
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை இன்று பிற்பகல் 3 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Notification பகுதியில் SSLC, April 2024- Scripts Download என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் “Application for Retotalling/Revaluation” என்ற தலைப்பினை Click செய்து வெற்று விண்ணப்பித்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து நாளை பிற்பகல் 3 மணி முதல் வரும் 10ம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து அதற்குரிய கட்டணத் தொகையை பணமாக செலுத்த வேண்டும்.
கட்டணம்:
அதன்படி மறுமதிப்பீடு பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505, மறு கூட்டல் பாடம் ஒவ்வொன்றிற்கும் 205 ஆகும். இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-பவானிகார்த்திக்