10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் எடுத்த அதிசயம் தருமபுரியில் நடந்துள்ளது.
தொப்பூர் அருகே சின்னக்கனவாய் கிராமத்தைச் சேர்ந்த ராமதேவி, லட்சுமி தேவி ஆகிய இரட்டை சகோதரிகள் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்துள்ளனர். இவர்களது பெற்றோர் கூலித்தொழிலாளர்கள்.
ஒரே நாளில் ஒரு டெஸ்கில் அமர்ந்து 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவிகள் இருவரும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக இருவரும் ஒரே மாதிரியாக 347 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
ராமதேவி தமிழில் 91, ஆங்கிலத்தில் 79, கணிதத்தில் 59, அறிவியலில் 58, சமூக அறிவியலில் 60 மதிப்பெண்கள் என மொத்தம் 347 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதேசமயம் லட்சுமி தேவி, தமிழில் 83, ஆங்கிலத்திஉல் 87, கணிதத்தில் 56, அறிவியலில் 60, சமூக அறிவியலில் 61 என மொத்தம் 347 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.