ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு நிதியில் 11 கோடியே 32 லட்சம் நிதி ஆளுனரின் வீட்டுச்செலவு கணக்கிற்கு மாற்றப்பட்டு என்ன செலவழிக்கப்பட்டது என்றே தெரியவில்லை, இது விதி மீறல் என்றே குறிப்பிடுவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டபேரவையில் இன்று ஆளுநர் செயல்பாடுகளை குறித்த முதலமைச்சரின் தனித் தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை, அட்சயப் பாத்திரம் திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து பேசினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், ஆளுநர்களுக்கு 3 தலைப்புகளில் செலவுகள் ஒதுக்கப்படுகிறது. செயலாக்கம், வீட்டு செலவு, petty grants என மூன்று பிரிவில் நிதி ஒதுக்கப்படுகிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பட்ஜெட் ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு 2 கோடியே 80 லட்சமும், இந்த ஆண்டு 3 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு 75 லட்சம் நிதி அதிகமாக முதலமைச்சர் ஒதுக்கி உள்ளார். ஆளுநருக்கான வீட்டு செலவுக்கு கடந்த ஆண்டு 15 கோடியே 93 லட்சம் என்று இருந்ததை இந்த ஆண்டு 16 கோடி 69 லட்சம் ஆக அதிகப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை 2011- 12ல் 8 லட்சமும், 2012- 13ல் 8 லட்சம் என 2016- 17ல் 5 லட்சம் 44ஆயிரமும், 2018-19ல் 1லட்சத்து 57ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. அடுத்த மூன்று மாதத்திலேயே 50 லட்சமாகவும் அடுத்த மூன்று மாதத்தில் 5 லட்சமாக இந்த petty grants நிதியை மாற்றியுள்ளனர். 2 கோடி, 2 கோடி என மொத்தம் நான்கு கோடி அட்சய பாத்திரத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அட்சய பாத்திரம் என்ற காரணத்தை சொல்லி, ஆளுநர் உடைய வீட்டு செலவு வங்கி கணக்கில் அது மாற்றப்பட்டுள்ளது. மீதி வேறு ஒரு இடத்திற்கு சென்றுள்ளது.
Petty grants என்ற கணக்கில் மொத்தம் ரூ.18 கோடி 38 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 18 கோடி 38 லட்சத்தில் 11 கோடியே 32 லட்சம் அவர்கள் கணக்கு மாற்றப்பட்டது, அதை எங்கே செலவு செய்தார்கள் என்று அரசுக்கு தெரியாது. இது விதிமுறை மீறல். அட்சய பாத்திரம் என்று பெயரை சொல்லி கவர்னர் உடைய house hold கணக்கில் தான் நிதி மாற்றப்பட்டுள்ளது.
Discretionary grand என்ற பிரிவில் அனைத்து மாநிலத்திலும் மிகவும் குறைவாகவே நிதி வழங்கப்படுகிறது. செப்டம்பர் 2021 வரை இந்த நிதி எல்லாம் ஏதோ (chartiable) நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
Petty grants என்ற ஆளுநருக்கான நிதியில் பாஜக ஆளுகின்ற கர்நாடகாவில் 25 லட்சமும் , கேரளாவில் 25 லட்சம், மேற்குவங்கத்தில் 25 லட்சமும் என்று தான் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் செப்டம்பர் 2021க்கு முன்பு இந்த நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2021 பிறகு யு.பி.எஸ்.சி மாணவர்கள் கூட்டத்திற்கு 5 லட்சமும், தேனீர் விருந்துக்கு 30 லட்சமும், ஊட்டி ராஜ்பவனில் கலாச்சார விழாவிற்கு 3 லட்சமும் என petty grants நிதி செலவிடபபட்டுள்ளது.
இந்த பிரிவில் ஒரே நபருக்கு மீண்டும் மீண்டும் தொகையை கொடுக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு என போனஸ் என்று ஒரு முறை 18 லட்சம் என்றும், ஒரு முறை 14 லட்சம் என கொடுக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களின் மருத்துவ செலவுகள், திருமண உதவிக்கோ, பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டிய நிதி ஆகும், ஆனால் ஆளுநர் நிதி இது தவறாக பயன்படுத்தி உள்ளனர். பல செலவுகள் அரசு நிதியை விதிமீறி ஆளுநர் நிதிக்கு தரப்பட்டுள்ளது.
இனி இதுபோன்ற விதிமுறை மீறல் தடுக்கப்படும். உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.