“ராகுல்காந்தி நாக்கிற்கு 11லட்சம்…” சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது வழக்கு..!!
மகாராஷ்டிரா சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாக்கை அறுத்தால் 11 லட்சம் தருவதாக ஷிண்டே சிவசேனா கூறியது சர்ச்சையாக வெடித்துள்ளது.. மேலும் ஷிண்டே சிவசேனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அண்மையில் அமெரிக்கா சென்ற போது இடஒதுக்கீடு தொடர்பாக அவர் சில முக்கிய கருத்துகளை பதிவிட்டுள்ளார். விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் காலம் காலமாக இடஒதுக்கீட்டை எதிர்த்து வலம் வரும் வலதுசாரிகள், ராகுல் காந்திதான் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசிவிட்டதாக விமர்சனங்கள் எழத்தொடங்கியது..
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட், ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்., அவர் பேசியதாவது “அம்பேத்கரை தோற்கடித்தது காங்கிரஸ் கட்சி தான் மராத்தா, தங்கர்கள், இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினரிடையே இட ஒதுக்கீட்டிற்காக போராடுகிறார்கள்.. ராகுல்காந்தி பேசுவதெல்லாம் இந்த கால ஆட்சிக்கு தேவையில்லை 400 ஆண்டு களுக்கு முன் சொல்ல வேண்டியது செய்ய வேண்டியதை எல்லாம் ராகுல்காந்தி செய்து வருகிறார்.. அவருடைய நாக்கை வெட்டினால் 11 லட்சம் பரிசு தருவதாக சிவசேனா கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது..
இதுகுறித்து மகாராஷ்டிரா மாநிலம் காங்கிரஸ் கமிட்டி அதுல் லோண்டே கூறுகையில், சமூகத்தில் வாழவே தகுதியில்லாதவர் சஞ்சய் கெய்க்வாட். ஆகையால்தான் போலீசில் புகார் கொடுத்துள்ளோம் என்றார். இதன் அடிப்படையில் புல்தானா போலீசார் சஞ்சய் கெய்க்வாட் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்துள்ள சஞ்சய் கெய்க்வாட் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர்; தாம் புலியை வேட்டையாடி புலி பல்லை அணிந்திருப்பதாக கூறி வசமாக சிக்கிக் கொண்டவர். சஞ்சய் கெய்க்வாட்டின் காரை போலீசார் ஒருவர் கழுவும் வீடியோ வெளியாகியும் சர்ச்சையில் சிக்கினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..