ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ராமன் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் கணேஷ்வரன் (16) என்ற மாணவன் அந்தியூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கணேஷ்வரன் அதில் தோல்வி அடைந்துள்ளார்.
தோல்வி அடைந்த மன வேதனையில் இருந்து கணேஷ்வரன் வீட்டில் படுக்கையறையில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், தொடர்ந்து சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.