மதுவை கொடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 11 ஆம் வகுப்பு மாணவன் கைது…!

கிருஷ்ணகிரி அருகே மதுவை கொடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 11 ஆம் வகுப்பு மாணவனை கைது செய்த காவல்துறையினர் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

வேப்பனஹள்ளி, திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அந்த பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறான். அதேபகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற சிறுவன், குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளான்

பாலியல் வன்கொடுமை செய்த 11 ஆம் வகுப்பு மாணவன் கைது…!

பின்னர், அங்கு வந்த கொத்தூர் ராஜா, திம்மசந்திரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மஞ்சுநாத் ஆகியோருடன் இணைந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது பொற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.

பின்னர் மாணவி அளித்த புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 11 ஆம் வகுப்பு மாணவனை கைதுசெய்தனர். தலைமறைவாக உள்ள இளைஞர்களை 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

What do you think?

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதில் ஊழல்…!துரைமுருகன் குற்றச்சாட்டு

தீவிரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் தீவிரமாக செயல்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்…!