12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மூவர் அதிரடி கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் அருகே பெற்றோரை இழந்த 12 வயது சிறுமி தனது உறவினருடன் வாழ்ந்து வருகிறார். இச்சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த சந்துரு, பார்த்திபன், கண்ணன் ஆகிய மூன்று பேர் கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் மது போதையில் இருந்த அம்மூவரும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேம் என்றும் அவர்கள் சிறுமியை மிரட்டியுள்ளனர்.

ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பிலிருந்து வாணியம்பாடி காவல் ஆய்வாளர் மங்கையர்கரசியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சந்துரு, பார்த்திபன், கண்ணன் மூவரையும் போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

தங்கம் விலை கிடு கிடு உயர்வு..!

விஜயகாந்தை விட்டு விட்டு வாசனுக்கு சீட் கொடுக்கும் அதிமுகவின் பின்னணி என்ன?