பல் பிரச்சனையால் 12 வயதில் – பல் கிளிப் அணிவது சரியா..?
பற்களில் பிரச்சனை ஏற்படும் பொழுது அதற்குரிய வயது இருபவர்களுக்கு எளிதாக சரி செய்து விடலாம். அதிலும் 12 வயது என்பது சுலபமாக சரி செய்து விடலாம்.
Fixed Brace எனப்படும் கிளிப்பை நிரந்தரமாக பயன் படுத்தினால், பற்களின் அமைப்பில் மாற்றத்தை உருவாக்கும், அதை நம்மால் உணரவும் முடியும். இல்லையெனில் அருகில் உள்ள பல் மருத்துவரை அணுகி, பரிசோதித்துக் கொள்ளவும்.
மருத்துவர் பரிசோதித்து விட்டு உங்கள் பற்களுக்கு ஏற்றவாறு, கிளிப் அணிய பரிந்துரை செய்வார். கிளிப் அணிந்த பின் அதற்கென்று குறிப்பிட்ட கால அவகாசம் வரை பற்களில் கிளப் அணிந்து இருக்க வேண்டும்.
இடைப்பட்ட காலத்தில் அதை கழற்றி மாட்டக் கூடாது. ஒரு ஆண்டு வரையாவது கிளிப் அணிந்து இருக்க வேண்டும்.
அடிக்கடி கழற்றி மாட்டும் பொழுது, சிகிச்சை காலம் நீடிக்க கூடும்.
மேலும் இதுபோன்ற பல தகவல்கள் தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி