ப்ளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது

தமிழகம், புதுவையில் ப்ளஸ் 2 இன்று தொடங்கியது, இந்த தேர்வில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இன்று துவங்கியுள்ள 2019-20 ஆண்டுக்கான ப்ளஸ் 2 பொதுத்தேர்வு வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

பழைய பாடத்திட்டத்தில் 5 ஆயிரத்து 828 தனித்தேர்வர்களும், புதிய பாடத்திட்டத்தில் 2 ஆயிரத்து 655 நேரடி தனித்தேர்வர்களும் என மொத்தம் 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 பேர் தேர்வு எழுதுகின்றனர். .

What do you think?

CORONA- பலி எண்ணிக்கை 3,000; பாதிப்பு 1 லட்சம்

ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் கதை RACE நடிகருக்காக எழுதியதா?