14 கிலோ மீட்டர்.. கோலாட்டத்துடன் கும்மி அடித்த பெண்கள்..
பிரசித்தி பெற்ற ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்வது வழக்கம்.
இந்தநிலையில் தற்போது தினசரியும் பல்லாயிரக்கணக்கான நிறுவனம் வந்தவண்ணம் உள்ளனர். ஆந்திரா மாநிலம் அன்னமாய் மாவட்டம் ரயில்வே கோடு ஊரைச் சேர்ந்த வெங்கமாம்பா குழுவினைச் சேர்ந்த 22 பெண்கள் உள்ளிட்ட பலர் அண்ணாமலையார் மீது மிகுந்த பக்தியுடன் தெலுங்கு பக்தி பாடலுக்கு ராஜகோபுரத்தில் தொடங்கி 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவல பாதையில் கோலாட்டம் போட்டவாறு கிரிவலம் வந்தனர்.
கடந்த எட்டு ஆண்டுகளாக ஆந்திராவில் இருக்கும் அனைத்து கோவில்களிலும் இதுபோன்று கடவுள் மீது கொண்ட பக்தியால் இந்த குழுவினர் பாட்டு பாடி நடனமாடி வளம் வந்து கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பிரமோற்சவத்தின் போது இந்த குழுவினர் நடனம் ஆடுவது குறிப்பிடத்தக்கது. தற்போது திருவண்ணாமலையில் இவர்கள் முதல்முறையாக அண்ணாமலையார் மீது கொண்ட பக்தியால் பக்தி பாடலுக்கு ஏற்ப கோலாட்டம் ஆடி கிரிவலம் வந்தனர்.
முன்னிரவில் தேரடி வீதியில் உள்ள ராஜகோபுரம் முன்பு துவங்கிய இந்த நடன குழுவினரின் நடனம் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலம் பாதை முழுவதும் நடனம் ஆடி விடியற்காலை அண்ணாமலையார் ஆலயம் வந்தடைந்தனர்.
-பவானி கார்த்திக்