14 ஆண்டு உழைப்பு ; இன்று தொழில் அதிபர் என்ற பெயர்..!
உழைப்பால் உயரு உடம்பில் வேண்டும் fire என்று சொல்லுவார்கள், அதில் வெற்றி அடைய பலரும் முயற்ச்சி செய்வார்கள், ஆனால் ஒரு சிலர் மட்டும் தான் தோல்வி அடைவார்கள். சிலர் தோல்விக் கண்டாலும் அதை விடா முயற்சியாக செய்து வெற்றி என்ற இலக்கை அடைவார்கள்.
அப்படி உழைப்பால் உயர்ந்து வெற்றி என்ற இலக்கை அடைந்த, நான் சந்தித்த மனிதர் தான் திரு “குட்டி மணி பால துறை” யார் இவர்? இவர் என்ன தொழில் செய்கிறார் என்று நீங்கள் நினைக்கலாம்.., உங்களுக்காக அவரை பற்றி..,
என் பெயர் குட்டிமணி பால துறை.., வேலூர் ஆரணியில் பிறந்த ஒரு சாதாரண ஏழை குடும்பத்தின் மகன் தான் நான். கல்லூரி படிப்பை முடித்த பின் வேலை தேடி சென்னை வந்தேன்.., எனக்கு ஐ.டி கம்பெனியில் வேலை சேர வேண்டும் என்ற ஆசை..,
அந்த ஆசையோடு தான் சென்னைக்கும் வந்தேன் அதற்காக ஏராத கம்பெனிகள் இல்லை.., வேலையில் சேர்ந்து உழைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சென்னை என்ற பெயர் மட்டும் தான் தெரியும் அதில் ஒரு நண்பர் கூட எனக்கு தெரியாது.
பின் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் ஏஜென்ட் ஆக வேலைக்கு சேர்ந்தேன், மாதம் 1200 ரூபாய் தான் சம்பளம். தங்குவதற்காக 300 ரூபாய்க்கு ஒரு மேன்ஷனில் வேலைக்கு சேர்ந்தேன். வேலைக்கு சேர்ந்த பின் இந்த சம்பளம் போதவில்லை.., பேருந்தில் சென்றால் கூட காசு செலவாகும் என்பதற்காக 20கிமி நடந்தே வேலைக்கு செல்வேன்.
இங்கு வேலைக்கு சிலர் நண்பர்கள் உதவியோடு standard charterd bank ல் probationaray officer ஆக வேலை கிடைத்தது. அப்பொழுது எனக்கு தெரியாது என் வாழ்க்கை மாற போவதே இங்கு இருந்து தான் என்று..,
அயராமல் உழைத்தேன் சம்பளம் + இன்சென்டிவ் கிடைத்தது.., என் தொடர் உழைப்பால் 20 முறை சம்பள உயர்வு கிடைத்தது. 14 ஆண்டுகளுக்கு பின் Tamil Matrimoney -யில் vice president ஆக சேர்ந்தேன்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் எனக்கு திருமணம் நிச்சயம் ஆனது.., எனக்கு சுயமாக தொழில் செய்யவேண்டும் என்று ஆசை, எனவே திருமணத்திற்கு பின் நான் எப்பொழுது வேண்டுமானாலும் வேலையை விட்டு நின்று தொழில் செய்ய தொடங்கி விடுவேன் என்று சொல்லி திருமணம் செய்தேன்.
எனக்கு சேல்ஸ் மார்க்கெட்டிங் என்றால் பிடிக்கும்.., எனக்கு மிகவும் பழகிய தொழில் அதை சுயமாக தொழில் செய்ய முடிவெடுத்து அதை தொடங்கினேன்.
தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை.., ஆண்டவன் அருளால் நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரே ஒரு பிரான்ச்.., ஆனால் இன்று ஆரணி, வேலூர், திருவண்ணாமலை, பொன்னேரி மற்றும் சென்னையில் புரசைவாக்கம், பட்டாபிராம், ஆவடி, மற்றும் கிண்டி என பல பிரான்ச்கள் உள்ளது.
வேலை தேடி வெளியூரில் இருந்து வரும் இளைஞர்கள் யாராக இருந்தாலும் என்னிடம் வேலை தேடி வந்தால் அவர்களின் படிப்பிற்கு ஏற்ற வேலை கட்டாயம் கொடுப்பேன் “Trance Home India Services Pvt Ltd ” கம்பெனி பெயர்.
இதை படிக்கும் உங்களுக்கு வேலை வேண்டும் என்றாலோ.., அல்லது உங்கள் நண்பர் அல்லது உறவினர் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்றால் கட்டாயம் இதை பகிருங்கள்.
மேலும் இதுபோன்ற பல உண்மை கதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி