2025-ல் காசநோய் இல்லா தமிழ்நாடு..!
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் காசநோய் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் “காசநோய் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை இன்று (07.12.2024) ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மூலம் காசநோய் ஒழிப்புப் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது.
காசநோய் (TB) என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாவால் காற்றின் மூலம் பரவும் தொற்று நோயாகும். இந்நோய் முடி மற்றும் நகங்களை தவிர உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்ககூடியது.
காசநோயாயின் அறிகுறிகளான, 2 வாரம் தொடர்ந்து இருமல், காய்ச்சல் மற்றும் சளியில் இரத்தம் வருதல், போன்றவை இருந்தால் சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே மேற்கொள்ள வேண்டும். காசநோய் கண்டறியப்பட்டால் ஆறு மாத காலம் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இந்த சிகிச்சை தொடர்ந்து மேற்கொள்ள தவறினால் பன்மருந்து எதிர்ப்பு காசநோயாக (MDR) மாற அதிக வாய்ப்பு உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 140 ஆரம்ப சுகாதார மையங்களில் சளி பரிசோதனை செய்ய வசதிகள் உள்ளன. மேலும் 18 CBNAAT மற்றும் 39 TruNat கருவிகள் உள்ளன. இந்த மரபணு கருவிகள் மூலம் காசநோயின் தீவிரம் குறித்து துரிதமாக அறிய முடியும். மேலும் 7 நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியை உள்ளடக்கிய நடமாடும் வாகனங்களும் (Mobile X-Ray vehicle) அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு நவம்பர் (2024) வரை 2,88,331 நபர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 7,968 நபர்களுக்கு பெருநகர சென்னை ஆரம்ப சுகாதார மையங்கள் மூலமாகவும், 4,857 நபர்களுக்கு தனியார் மருத்துவ நிலையங்கள் மூலமாகவும் காசநோய் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காசநோய் கண்டறியப்பட்டவர்கள் உடன் வசிக்கும் 8,735 நபர்களில் 5767 (66%) காசநோய் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
காசநோயை 2025-ம் ஆண்டிற்குள் முடிவுக்குக் கொண்டுவருவதை இலக்காக அரசு நிர்ணயத்திருக்கிறது. இதை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு நூறு நாட்களுக்கு காசநோய் தீவிர விழிப்புணர்வு ஸ்டாலின் பிரச்சாரத்தை 7-ம் டிசம்பர் முதல் தொடங்க உள்ளது.
இந்த 100 நாள் காசநோய் இல்லா தமிழ்நாடு தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோக்கங்கள் பின்வருவன,
1. காச நோயாளிகளை விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளித்தல்.
2. காசநோயால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை குறைத்தல்
3. சமூகத்தில் காச நோயின் தாக்கத்தை குறைத்தல்,
இந்த 100 நாள் தீவிர விரச்சாரத்தின் போது கீழ்கண்ட நடவடிக்கைகள் பெருநகர செள்ளை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் மேற்கொள்ளப்படும்.
o சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,
o காசநோய் எளிதில் பாதிக்ககூடியவர்களுக்கு 100% பரிசோதனை வழங்குதல், இதற்காக நலப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று காசநோய்கான 10 அறிகுறிகளை கேட்டறிவார்கள், அறிகுறிகள் இருக்கும் நபர்களை அருகில் உள்ள மாநகரஆரம்ப சுகாதார மையங்களுக்கு பரிந்துரை செய்து. அவர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்படும். இதன் மூலம் காசநோயாளிகள் கண்டறியபட்டு சிகிச்சைகுட்படுத்தப்படுவார்கள்.
o காசநோயுடன் இணை நோய்களை நீரிழிவு, டயாலிஸிஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களையும் கண்டறிந்து அதற்கான முறையான சிகிச்சை வழங்குதல்,
o ஊட்டச்சத்து குறைப்பாட்டை தடுத்தல்.
o காச நோயாளிகளுடன் உடன் வசிப்பவர்கள் மற்றும் எச்.ஐ.வி. நோயாளிகளுக்கு உரிய பரிசோதக்குப்பின், காச நோய் தடுப்பு சிகிச்சை வழங்குதல். உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படும்.
இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் திரு. ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி.ஜெய சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி அவர்கள், மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.