144 தடை உத்தரவில் உள்ள கட்டுபாடுகள்!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த 144 தடை உத்தரவில் உள்ள கட்டுபாடுகள், ” அத்தியாவசிய (பால், உணவு, சரக்கு வாகனங்கள்) மற்றும் அவசரப் பணிகளுக்கான போக்குவரத்து இயங்கும். பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸி போன்றவை இயங்காது.

அத்தியாவசிய பொருட்களுக்கான வாகனங்கள் தவிர, மாநிலங்களுக்கு இடையேயான, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துகளுக்கு முற்றிலும் தடை.

பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் இயங்கும் மற்ற அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது.

அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலங்கள்மூடப்படும். காவல்துறை, தீயணைப்புத் துறை, சிறைத்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை இயங்கும்.

தனியார் மருத்துவ நிறுவனங்கள் இயங்கும் மற்ற தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும்.

அத்தியாவசியமான பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க வேண்டும் என்றும் அத்தியாவசிய கட்டடப்பணிகள் தவிர, பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும் அதே சமயம் அம்மா உணவகங்கள் வழக்கம்போல இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

‘FEFSI தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சூர்யாவின் குடும்பம்’ அதுவும் இத்தனை கோடியா?

‘கொரோனா வைரஸ் உயிரிழப்பு’ 15 ஆயிரத்தை தாண்டியது!