15.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேட்டரி வாகனம்-தரங்கம்பாடி
தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியில் சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள 15.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேட்டரி வாகனத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக கூடுதலாக பேட்டரி வாகனம் வாங்க திட்டமிடப்பட்டது.
இதையடுத்து, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்
2023-24ன் கீழ் 15.80 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பயன்பாட்டுக்காக புதிய பேட்டரி வாகனம் வாங்கப்பட்டு துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கொடியசைத்து பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.