ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான – அசத்தலான அஞ்சு டிப்ஸ் 15
உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்க சில உணவுகளை நம் அன்றாட வாழ்வில் சேர்த்துக்கொண்டாலே போதும், அதற்கான சில டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.
பாகற்காய் : வாரத்திற்கு ஒரு முறையாவது பாகற்காய் எடுத்துக்கொள்ள வேண்டும், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, புற்று நோய் அபாயத்தில் இருந்து காக்கிறது.
உடம்பில் ரத்த சர்க்கரையின் அளவை குறைக்க செய்யும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.
வாழைத்தண்டு : சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வாழைத்தண்டு எடுத்துக்கொள்ளலாம்.
வயிற்றில் சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள். தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால், கல் கரைந்து விடும்.
வெள்ளரிக்காய் : வெயில் காலத்திற்கு ஏற்ற ஒரு உணவு, தடினமான வெள்ளரிக்காயை சமையல் செய்து சாப்பிடலாம். இதனால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்கிறது.
தினமும் ஒரு பிஞ்சு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, சருமத்தையும் பொலிவுடன் வைக்கச் செய்கிறது.
கேரட் : பீட்டா, கரோட்டின், நார்ச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும். பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், கால்சியம் மற்றும் கார்போ ஹைட் ரேட், மற்றும் வைட்டமின் சி இருப்பதால். கண், தோல் மற்றும் எலும்பு போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
பீன்ஸ் : வாரத்திற்கு மூன்று முறையாவது பீன்ஸ் பொரியல் செய்து சாப்பிட வேண்டும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். சிறுநீர் கல்லடைப்பு உள்ளவர்கள் பீன்சை தவரிப்பது நல்லது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.