இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள இத்தாலியர்கள் 15 பேருக்கு கொரோனா வைரஸ்!

இந்தியாவுக்கு சுற்றுலாவிற்காக வந்துள்ள இத்தாலியை சேர்ந்த 15 சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவிய இந்த கொரோனா வைரஸால் இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணத்திற்கு வந்துள்ள இத்தாலியிலியர்கள் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் அனைவரும் சாவ்லாவில் உள்ள இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

What do you think?

‘விமான நிலையத்திலிருந்து வெளியேறிய முதலமைச்சர்’ இடைமறித்த இஸ்லாமிய அமைப்பினர்!

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ்!