15 வயது சிறுவனிடம் அத்துமீறிய வாத்தியார்…போக்சோவில் கைது..!
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார் .
தினமும் மாலை நேரத்தில் சிறுவன் தனது வீட்டருகே உள்ள இந்தி டியூஷனுக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
நேற்று மாலை சிறுவன் வழக்கம் போல் டியூஷன் சென்ற நிலையில் டியூஷன் முடிந்த பிறகு அவரது இந்தி வாத்தியார் வாசுதேவன்(66) என்ற முதியவர் சக மாணவர்களை அனுப்பி விட்டு சிறுவனை மட்டும் ஒரு அறைக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈட்டுபட்டுள்ளார்.
இதனால் பயந்து போன மாணவன் அங்கிருந்த தப்பி வந்து பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே இது குறித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்
சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இந்தி டியூஷன் வாத்தியார் வாசுதேவனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்