சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா..!! முதல்முறையாக பங்கேற்ற ஆளுநர்..!!
சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.. 2018 ஆம் முதல் 2021 ஆம் ஆண்டு வரை 40 ஆராய்ச்சியாளர்களுக்கு, தமிழ்நாடு அறிவியலறிஞர் விருதுகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் தமிழ்நாடு மாநில கவுன்சில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்பாக தமிழ்நாடு அறிவியல் அறிஞர் விருது வழங்கும் விழா நடைபெற்றது..
இந்த பட்டமளிப்பு விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலை வகித்தார்., முன்னதாக அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார். அதன் பின் இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவரும், மும்பை ஹோமிபாபா தேசிய நிறுவனத்தின் வேந்தருமான “அனில் ககோட்கர்” சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களிடையே மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுத்தார்..
இந்த முறை பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் பெயர் இடம்பெற்றிருப்பது அனைவரிடமும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம், கடந்த ஒரு வருடமாகவே சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாருமே நியமனம் செய்யப்படவில்லை… நியமனம் செய்யபடாததற்கு காரணம் பல்கலை கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் குழுக்கள்தான் காரணம் என சொல்லபடுகிறது..
இப்படிப்பட்ட சூழலில் தான் துணைவேந்தர் இல்லாமலேயே பட்டமளிப்பு விழாவானது நடைபெற்றது. 167 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இல்லாமலேயே இந்த பட்டமளிப்பு சிறப்பு அழைப்பாளர்களை வைத்து நடத்தபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அறிந்துதான் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துணைவேந்தர் என்ற வகையில் துணைவேந்தருக்கு பதிலாக பட்டங்களில் கையெழுத்திட்டு பட்டங்களை வழங்கினார். அதற்கான சட்டபூர்வ ஒப்புதலும் போடப்பட்டது இதில் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது என்பதற்காக இன்றும் நாளையும் பட்டமளிப்பு விழா இரண்டு நாட்களாக நடத்த பல்கலை கழகம் திட்டமிட்டுள்ளது.
ஆனால் அதற்கு ஒருசிலர் ஒப்புதல் அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது.. அதற்கு காரணம் தங்களது 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக முன்னரே அறிவித்திருந்தனர்.. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது., ஆனால் பேச்சு வார்த்தை முழுமை அடையாத சூழலில் தான் இந்த பட்டமளிப்பு விழாவானது நடத்தப்பட்டது..
தமிழகத்திற்கு இதுவரை ஆளுநர் எந்த ஒரு உதவியும் அளிக்காததால் ., அவர் பங்கேற்கும் விழாவில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என அமைச்சர்கள் புறக்கணித்து வந்த நிலையில் ஆளுநரும் முதலில் புறகணித்ததாக சொல்லபடுகிறது.,
யாரும் எதிர்பாராத வகையில் ஆளுநர், பொன்முடி இருவருமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்ள முன்கூட்டியே அமைச்சர் பொன்முடி வருகை புரிந்திருந்தார்.. ஆளுநர் ஆர்.என்.ரவி வந்த போது அவருக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றது பெரிதும் கவனம் பெற்றது.. பிறகு இருவருமே ஒரே மேடையில் உட்கார்ந்திருந்தனர்.. நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி ஆகிய இருவரையும் ஒரே மேடையில் பார்க்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.
இவ்விழாவில் தமிழ்நாடு அறிவியலறிஞர்கள் விருதுகள் 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை வேளாண்மையியல், உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரிவுகளில் 4 ஆண்டுகளில் 40 பேருக்கு தமிழக அறிவியலறிஞர் விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் 120 பேருக்கு மாதம் 25 ஆயிரமும், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாறுகளில் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு மாதம் 10 ஆயிரமும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்..