‘கொரோனா அச்சம்’ நாடு முழுவதும் 168 ரயில்கள் ரத்து!

கொரோனா வைரஸ் அச்சத்தால் பயணிகள் வருகை குறைந்ததால் நாடு முழுவதும் 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா அச்சம் காரணமாக பலரும் வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சத்தால் பயணிகள் வருகை குறைந்தது. மேலும் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் தங்களது முன்பதிவை கேன்சல் செய்தனர். இதனால் நாளை முதல் வரும் மார்ச் 31ம் தேதி வரை இந்த 168 ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஏராளமான சிறப்பு ரயில்கள் மற்றும் பேசஞ்சர் ரயில்கள் கொரோனாவால் பயணிகள் குறைந்ததால் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

‘அரசியல் ஆதாயம்’ தன்னை தானே அரிவாளால் வெட்டி கொண்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர்!

‘என் கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான தருணம் இது தான்’ ரிக்கி பாண்டிங் வேதனை!