கொரோனாவால் எகிப்து கப்பலில் சிக்கியுள்ள 17 தமிழர்கள்!

எகிப்துக்கு சுற்றுலா சென்ற 17 தமிழர்களும் கொரோனா வைரஸ் காரணமாக கப்பலில் சிக்கியுள்ளனர்.

தமிழகத்தின் கோவை, பொள்ளாச்சி, சேலம் மற்றும் சென்னையைச் சேர்ந்த 17 தமிழர்கள் எகிப்து நாட்டிற்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அந்நாட்டின் தலைநகர் கெய்ரோவிலிருந்து லக்சருக்கு கப்பலில் சென்றுள்ளனர். அவர்களுடன் கப்பலில் பயணித்த அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிலருக்கு கொரோனோ பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கப்பலில் இருப்பவர்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டது. இதனால் 17 தமிழர்களும் கப்பலில் சிக்கிக்கொண்டனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த கப்பலில் சிக்கியுள்ள பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவர், “அங்கு தங்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை என்றும் நோய் அறிகுறி இல்லாதவர்களை கப்பலில் இருந்து வெளியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

What do you think?

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர்!

‘மூன்றாம் உலகப்போரா?’ திடீரென 3 ஏவுகணை சோதனைகளை நடத்திய வடகொரியா!