தமிழக பள்ளிகளில் 171 பாலியல் வன்முறை – அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழகம் முழுவதும் கடந்த 19 ஆண்டுகளில் 171 பாலியல் வன்முறை நிகழ்வுகள் நடந்திருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 2000 முதல் 2019 ஆம் ஆண்டு வரை பள்ளிகளில் மாணவிகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள், எண்ணிக்கை, அதன் மீதான நடவடிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முருகேஷ் என்பவர், பள்ளிக் கல்வித் துறையிடம் விவரம் கேட்டிருந்தார். அதற்கு உரிய பதில் அளிக்காததால் மாநில தகவல் ஆணையத்தில் அவர் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு விசாரணையில் பள்ளி கல்வித் துறை துணை இயக்குனர் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள், தனியார் பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, கடந்த 19 ஆண்டுகளில் 171 பாலியல் வன்முறை சம்பவங்கள் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடந்திருப்பதற்கான ஆவணங்களை கல்வி அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு உரிய பரிந்துரை அனுப்ப ஆணையம் முடிவு செய்திருப்பதாக, கூட்டத்தில் பங்கேற்ற தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மனோகரன் ஜெயக்குமார் தெரிவித்தார்.

What do you think?

தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்பு

ஏர் இந்தியா, சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு மோடி பாராட்டு